நில்! கவனி!! செல்!!!

வணக்கம் நண்பர்களே!

வாழ்க்கையில் ஏதோ ஒரு பெரிய இலட்சியத்தை நோக்கிய உங்கள் தேடல் தொடர்ந்து கொண்டிருகிறது என்பதை, தாங்கள் இந்த பக்கத்தை வந்தடைந்தமையிலிருந்தே அறிய முடிகிறது.

தேடல் இல்லாத வாழ்க்கை அர்த்தமற்றது என்பதை நன்கு உணர்ந்திருகிறீர்கள். ஆம், உண்மையிலேயே நம்முடைய தேடல்கள் நம்மை இலட்சிய பாதைக்கு, வெற்றிக்கு, மகத்தான சாதனைகளுக்கு அழைத்து செல்கிறது.

சரி, தத்துவத்தை நிறுத்திவிடுகிறேன். போதும்டா சாமி என்பது எனக்கு புரிகிறது.

ஒரு சின்ன கேள்வியில் இருந்து தொடங்கலாம். தங்களில் எத்தனை பேர்  கடன் இல்லாமல் இருகிறீர்கள்? இல்லை என்றால் மிகவும் நல்லது. அனால் துரதிர்ஷ்டவசமாக நம்மில் அநேகர் கடனோடதான் குடும்பம் நடத்துகிறோம்.

ஏன் நாம் கடனோட இருக்கிறோம்? நாம் சம்பாதிக்காமல் வெட்டியாக இருகிறோமா? கடந்த 10, 20  வருடங்களாக என்ன செய்தோம்? சம்பாதித்து கொண்டுதானே இருக்கிறோம். வேலையே செய்யவில்லை, சம்பாதிக்கவில்லை என்றால் கடன் வரலாம். கஷ்ட்டபட்டு இத்தனை ஆண்டு காலம் உழைத்து, பிறகு ஏன் கடன் வந்தது?

நம்ம தாத்தா, பாட்டி கடனோடதான் குடும்பம் நடத்தினாங்க. நம்ம அம்மா, அப்பா கடனோடதான் குடும்பம் நடத்தினாங்க. நாம் அப்படித்தான் நடத்துகிறோம். நம் பிள்ளைகளும் அப்படித்தான் கடனோடு தவிக்க விட போகிறோமா? அல்லது இன்று இதை பற்றி சிந்திக்க போகிறோமா?

நமது வாழ்க்கை ஓட்டத்தை நிறுத்துவோம். சற்றே கவனிப்போம். பிறகு செல்வோம். "நில்! கவனி!! செல்!!!" என்பதை வெற்றியின் இரகசியமாக ஒரு பைலரங்கத்தில் கற்றுத் தருகிறார்கள்.

நாம் நம் வாழ்க்கையில் தினம்தோறும் இயந்திரம் போல் உழன்றுகொண்டே இருப்பதை உணரமுடிகிறதா? நாம் என்ன படித்தோம்? எதற்காக படித்தோம்? நம்முடைய நோக்கம் என்ன? என்ன வேலையில் இருக்கிறோம்? என்ன சம்பளம் வாங்குகிறோம்? ஏன் கடன் வந்தது? அதில் இருந்து மீள்வது எப்படி? இன்னும் எத்தனையோ கேள்விகள்...

"நில்! கவனி!! செல்!!!" - வெற்றியின் இரகசியம்.

ஒன்றே ஒன்றுதான் இவை அனைத்திற்கும் காரணம்,  அது பணம்.

நம்மிடம் இல்லாத குணத்தை நாம் தான் வளர்த்து கொள்ள வேண்டும்.
நம்மிடம் இல்லாத பணத்தை நாம் தான் வளர்த்து கொள்ள வேண்டும்.

இந்த சூழ்நிலையில், நம் அனைத்து தேவைகளுக்கும், பிரச்சனைகளுக்கும் காரணம்,

பணத்தை பற்றிய புரிதல் இல்லாமைதான்.
பணத்தை பற்றிய விழிப்புணர்வு இல்லாமைதான்.
பணத்தை பற்றிய அறிவு இல்லாமைதான்.
பணம் செயல்படும் விதம் தெரியாததுதான்.
பணத்தை கையாள  தெரியாததுதான்.

சுற்றி வளைத்து பேச நான் விரும்பவில்லை. நேரடியாக செய்திக்கு வருகிறேன். பணத்தை பற்றியும், வளத்தை பற்றியும், வளமான வாழ்கை அமைத்துக் கொள்வது பற்றியும், அதற்கான நேரடியான வழிகளை பற்றியும் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன், உங்கள் அனுமதியோடு.

பணத்தை பற்றியா? ஆகா கிளம்பிட்டான்யா, கிளம்பிட்டான் என்று உடனே பக்கத்தை மூடி விடாதீர்கள். காசா? பணமா? சும்மா படியுங்கள்...

ஆனால், நான் ஒரு உறுதி அளிக்கிறேன். கட்டாயமாக இந்த பக்கத்தை முடிக்கும் போது நீங்கள் ஒரு தெளிவான முடிவுக்கு வருவீர்கள். செல்வம் தேடும் தங்கள் தேடலில் ஒரு புரிதலை அடைந்திருப்பீர்கள். அதற்கான திறவுகோலாக பலருக்கு இதிலிருக்கும் செய்திகள் அமையக்கூடும். ஓரிரு நிமிடங்கள் செலவிட்டு (காசில்லமால்தான்) இதனை முழுமையாக படித்தீர்களேயானால், அதுவே போதும்.

தாங்கள் கீழ்கண்ட வகைகளில் ஏதாவதொரு தேடலில் ஈடுபட்டிருந்தீர்களானால், நிச்சயமாக எமது அனைத்து பதிவுகளையும் முழுமையா படித்தாக வேண்டும்.
  • அதிகப்படி வருமானம்
  • பொருளாதார சுதந்திரம்
  • சொந்தமாக தொழில்
  • அதிகப்படியான உபரி நேரம்
  • ஆளுமையை வளர்த்தல்
  • அடுத்தவர்க்கு உதவுதல்
  • புதியவர்களை அறிதல்
  • புதிய உறவு முறைகளை வளர்த்தல்
  • பணி ஓய்வு திட்டம்
  • சாதனைகள் புரிதல்
  • பாராட்டுகள் மற்றும் பரிசுகள்
  • சரியான அங்கீகாரங்கள்

அல்லது

கீழ்கண்ட ஏதாவதொன்றிலோ, பலவற்றிலோ முயற்சித்து, பல மணி நேரங்களை விரயம் செய்து, எதுவுமே கிடைக்காமலிருந்தாலோ, எதிர்பார்த்த பலன் நடக்காமலிருந்தாலோ தாங்கள் தான் கட்டாயமாக இந்த பக்கங்களை முழுமையாக படித்தாக வேண்டும்.
  • Online Data Entry
  • Paid to Click
  • Paid to Online Surveys
  • Affiliate Marketing
  • HYIP - Online Investment Concepts
  • Online Data Conversion
  • Online Forex Trading
  • Paid to Surf
  • Online Ad Posting
  • Other Quick Earn Schemes on the Net

இதன் தொடர்ச்சியான மேற்கொண்டு பல நல்ல கட்டுரைகளை படிக்கவும், நடைமுறை சாத்தியமான வழிவகைகளை தெரிந்து கொள்ளவும் தொடர்ந்து நமது பதிவுகளை படியுங்கள்.